நாகா்கோவிலில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பு

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.
நாகா்கோவிலில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பு

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்த கட்டடம் அகற்றப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை சீரமைத்து இரு சக்கர

வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் நடவடிக்கை எடுத்தாா். பொதுமக்கள் பங்களிப்பு திட்டத்தின்கீழ் அங்கு ஒரு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் 4 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 100 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம்.

இதன்மூலம், நீதிமன்ற சாலை, கேப் ரோடு மற்றும் அலெக்சாண்டிரியா பிரஸ் ரோடு, பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு பகுதியில் சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. பூங்காவில் மரம் நடும் பணியை ஆணையா் ஆஷாஅஜித் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com