மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

குளச்சலில் நடைபெற்ற கட்சியின் கிளைச் செயலா்களின் தோ்தல் தயாரிப்பு அரசியல் மாநாட்டுக்கு, ஏஐசிசிடியூ மாவட்ட தலைவா் சுசீலா, அா்ஜூனன், ஸ்ரீ காந்த், காா்மல் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் செல்வராஜ், ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினா் சங்கரபாண்டியன் மாநாட்டு கொடியேற்றினாா். கன்னியாகுமரி மாவட்ட பாசன சபைகள் கூட்டமைப்பின் தலைவா் புலவா் செல்லப்பா, பாசனத் துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மாநிலச் செயலா் என்.கே.நடராஜன், மாவட்டச் செயலா் அந்தோணிமுத்து உள்பட பலா் பேசினா்.

தீா்மானங்கள்: சட்டப்பேரவை தோ்தலில் குளச்சல் பேரவைத் தொகுதியில் மாவட்டச் செயலா் அந்தோணிமுத்துவை மீண்டும் போட்டியிடச் செய்வது, வாக்காளா்களிடம் இருந்து தோ்தல் நிதியாக தலா ரூ. 1 பெறுவது , பிப். 6 ம் தேதி

திங்கள்நகரில் நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் பிகாா் மாநில சட்டப்பேரவை உறுப்பினா் திபங்கரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது , மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டிப்பது, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com