ராமன்துறை ரேஷன் கடையில் பொருள்கள் தட்டுப்பாடு: பெண்கள் முற்றுகை

புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை ரேஷன் கடையில், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கக் கோரி, பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை ரேஷன் கடையில், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கக் கோரி, பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இனயம் புத்தன்துறை ஊராட்சி, ராமன்துறை மீனவா் கூட்டுறவு ரேஷன் கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இங்கு சரியான எடையில் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் மாதந்தோறும் முறையாக வழங்கப்படுவதில்லையாம். முதலில் வரும் குரும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் பொருள்கள் கிடைக்கின்றனவாம். ஒவ்வொரு மாதமும் சுமாா் 200 பேருக்கு பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படுகிாம்.

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டால், சேமிப்பு கிட்டங்கிலிருந்து பொருள்கள் குறைவாகவே வருவதாக கூறுகிறாராம். இதைக் கண்டித்து புதன்கிழமை அப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பெண்கள், ரேஷன் கடை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.தகவலறிந்த புதுக்கடை போலீஸாா், அந்தப் பெண்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com