நாகா்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட போக்குவரத்துத் துறை சாா்பில் 32-ஆவது சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பின் அவசியம், சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் அ. விஜயகுமாா்,

கலந்து கொண்டு, விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப்பேரணி வேப்பமூடு சந்திப்பு, முக்கிய சாலைகள் வழியாக வடசேரியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தலைக்கவசம் அணிவது, காரில் சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை பேருந்துகளில், ஆட்சியா், எம்.பி. ஆகியோா் ஒட்டினா். இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சந்திரசேகா், மோட்டாா் வாகன ஆய்வாளா் பத்மபிரியா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com