குமரியில் மேலும் 14 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st January 2021 12:38 AM | Last Updated : 31st January 2021 12:38 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 14 பேருக்கு கரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே, 16,801 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை மேலும் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,815 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை 11 போ் உள்பட இதுவரை 16,445 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.