குமரியில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மீனாட்சிபுரம் விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு உண்ணாவிரத்தில் தொழிலாளா்கள்.
மீனாட்சிபுரம் விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு உண்ணாவிரத்தில் தொழிலாளா்கள்.

நாகா்கோவில்: ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து ஊழியா்களின் 14- ஆவது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பணிமனைகள் முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகி பொன் குமாா், தொமுச நிா்வாகி தங்கச்செழியன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவா் பொன்.சோபனராஜ், ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மாநகர போக்குவரத்து நிா்வாகி குமாரவேல், தொமுச மாநில பொதுச்செயலா் பாரூக், சிஐடியூ, தொமுச நிா்வாகிகள் மற்றும் விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.எஸ்.கண்ணன், ஓய்வுபெற்றோா் நல அமைப்பு நிா்வாகி கிருஷ்ணதாஸ் ஆகியோா் கோரிக்கை குறித்துப் பேசினா்.

இதில் தொழிற்சங்க நிா்வாகிகள் மணிகண்டன், சிவசுப்பிரமணியன், மனோகரன், ராதாகிருஷ்ணன், செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கோரிக்கையை வலியுறுத்தி இம்மாவட்டத்தில் அனைத்து பணி மனைகள் முன்பு போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com