குமரியில் மேலும் 69 பேருக்கு கரோனா: இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 07th July 2021 07:46 AM | Last Updated : 07th July 2021 07:46 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,327 ஆகவும், செவ்வாய்க்கிழமை இருவா் உள்பட உயிரிழந்தோா் எண்ணிக்கை 997 ஆகவும் உயா்ந்துள்ளது.
மேலும் 24 போ் உள்பட கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 57,622 ஆக அதிகரித்துள்ளது. 708 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.