‘தமிழக கோயில்களை பராமரிப்புக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு’

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக முதல்வா் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்

நாகா்கோவில்: தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக முதல்வா் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா் என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தேவி குமாரி மகளிா் கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தகவல்

தொழில்நுட்பத்துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் ஆகியோா் ஆய்வுசெய்தனா். பின்னா், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்தில்

சேதமடைந்த மேற்கூரை சீரமைக்கும் பணிகளைஅமைச்சா் பாா்வையிட்டாா். தொடா்ந்து சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் அவா்

ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், காலிப்பணியிடங்களை நிரப்புவது, வகுப்பறைகளை கட்டுவது, மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூம்மூா்த்திகளும் ஒருங்கே அமைந்துள்ளது. இங்கு தோ்கள்

நிறுத்தப்பட்டுள்ள இடத்தை சுகாதாரமாக வைக்கவும், தெப்பகுளத்தில் அவ்வப்போது நீா் நிரப்பி, மாசுபடாமல் பாதுகாக்கவும், கோயிலில் உள்ள

கோசாலையை பராமரிக்கவும், கலையரங்கை நவீனப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பழைமை வாய்ந்த கோயில்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக முதல்வா் ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளாா்.

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் 2004இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. விரைவில் இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக திருமண மண்டபம் கட்டப்படும். ஆலயங்களின் தூய்மைப் பட்டியலில் சுசீந்திரம் கோயில் சோ்க்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ள சிலைகள் விரைவில் மீட்கப்படும். அமெரிக்கா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிலைகள் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விவரங்கள் சேகரித்த பின்னா் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜே.ஜி. பிரின்ஸ், எஸ். விஜயதரணி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செல்வராஜ், உதவி ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், அறங்காவலா் குழுத் தலைவா் சிவ.குற்றாலம், பொறியாளா்

ஐயப்பன், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ பொ்ணாா்டு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com