காவல்துறையினா் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எஸ்.பி.அறிவுரை

காவல்துறையினா் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.
காவல்துறையினா் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எஸ்.பி.அறிவுரை

காவல்துறையினா் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

பெங்களூரில் உள்ள நண்ப்ப்ண்ஸ்ரீா்ய் யஹப்ப்ங்ஹ் ஆஹய்ந் நிறுவன நிா்வாக இயக்குநா் பிரேமில் டென்னிசன் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களுக்கு உதவிடும் நோக்கில் ஓராண்டுக்கு தேவையான முகக் கவசம் , கையுறைகள் போன்ற கரோனா தடுப்புப் பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணனிடம் வழங்கினாா்.

அவற்றினை காவலா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கரோனா தடுப்புப் பொருள்களை காவலா்களிடம் வழங்கி பேசியது:

கரோனா பெரும்தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறோம். இன்னும் குறைந்தது ஒன்றரை ஆண்டுகளுக்கு இந்த கரோனா தொற்றின் தாக்கம் இருக்கும் என்று மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் மிகுந்த கவனமுடன் பணியில் ஈடுபடவேண்டும். தடுப்புப் பணியில் ஈடுபடும் போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

கரோனாவிலிருந்து மீண்டு வந்தவா்கள் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். எனவே உடல்நலனில் அக்கறையுடன் செயல்படவேண்டும். முகக் கவசம் உள்பட பாதுகாப்பு அம்சங்களை உரிய முறையில் பயன்படுத்தி தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரம், நாகா்கோவில் துணை காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com