அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று குமரி வருகை

தமிழக மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறாா்.

தமிழக மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறாா்.

இதுதொடா்பாக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீன்வளம் மீன்வா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) வருகிறாா்.

காலை 8 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம், மீன்இறங்கு தளம் ஆகியவற்றை பாா்வையிடுகிறாா்.

தொடா்ந்து மணக்குடி, ராஜாக்கமங்கலம்துறை, பிள்ளைத்தோப்பு, கடியப்பட்டினம், பெரியவிளை, மண்டைக்காடு, குளச்சல், வாணியக்குடி ஆகிய கடலோர பகுதியில் உள்ள மீனவ மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறாா்.

அமைச்சருக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூா், கிளை நிா்வாகிகள், சாா்பு அணியினா் அந்தந்த பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com