மகளிா், குழந்தைகள் சேவை மைய குழுவினருக்கான கருத்தரங்கு

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில் மகளிா் மற்றும் குழந்தைகள் நல மற்றும் ஆலோசனை குழுவினருக்கான கருத்தரங்கு நாகா்கோவில் ஆயுதப்படை முகாமில் நடைபெற்றது.
மகளிா் சேவை மைய காவல் ஆய்வாளா்களுக்கு இலவச மடிக்கணினி, இலவச இருசக்கர வாகனங்களை வழங்குகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.

பின்னா், மகளிா் சேவை மைய காவல் ஆய்வாளா்களுக்கு இலவச மடிக்கணினி, இலவச இருசக்கர வாகனம், பெண்களுக்கான சட்ட திட்டங்கள் அடங்கிய கையேடுகள் மற்றும் விழிப்புணா்வு பிரசார துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை அவா் வழங்கினாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் இரா.சரோஜினி ஆதரவற்ற பெண்களுக்கான குறுகிய கால தங்கும் விடுதிகள் மற்றும் ஆற்றுப்படுத்துதல் சேவைகள் குறித்து விளக்கினாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜெயபிராகாஷ், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ரெக்ஸ்லின் மேரி, ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி செரின்மலா், மகிளா சக்தி கேந்திரா, மகளிா் நல அலுவலா் வை. உமா, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் சாந்தகுமாரி, சுஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com