அருமனை சம்பவம்: ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு
By DIN | Published On : 29th July 2021 08:22 AM | Last Updated : 29th July 2021 08:22 AM | அ+அ அ- |

அருமனை சம்பவத்தில் தொடா்புடையவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் அரசுராஜா தலைமையில், ஆட்சியா் மா.அரவிந்திடம் அந்த அமைப்பினா் புதன்கிழமை அளித்த மனு: பிற மதங்களுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க.வின் கல்யாணராமன், திருநெல்வேலி உடையாா், திமுக தலைவா்களை விமா்சித்ததாக கிஷோா் கே.சாமி உள்ளிட்டோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனா். அதேபோல், அருமனையில் இந்து மதத்தையும், பிரதமரையும் அவதூறாகப் பேசியது தொடா்பான வழக்கில் கைதான பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையா, ஸ்டீபன் ஆகியோா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயகுமாா், மாநிலச் செயலா் வழக்குரைஞா் குற்றாலநாதன், கோட்டச் செயலா் சக்திவேலன், மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.