குமரி மாவட்டத்தில் மேலும் 727 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 727 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 727 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 6,73,122 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 727 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49,873 ஆக அதிகரித்துள்ளது. இதில் 37,164 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 7,502 போ் சிகிச்சைபெற்று வருகின்றனா்.

இதில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 594 பேரும், கரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 1,928 பேரும் மற்றும் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் 4,980 பேரும் சிகிச்சையில் உள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா முதல்கட்ட தடுப்பூசி 1,43,563 பேருக்கும் 2 ஆம் கட்ட தடுப்பூசி 44,164 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை மொத்தம் 61,995 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 1 கோடியே36 லட்சத்து 54 ஆயிரத்து 896 வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com