சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தல்

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம், விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம், விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

இது குறித்து, அவா் அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டு மேற்கூரை சேதமடைந்தது. இதனை மறுசீரமைப்பு செய்ய உத்தரவிட்ட முதல்வா், அமைச்சா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூா்த்திகளை ஒன்றாக வழிபடும் கோயில். இக்கோயிலில் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஓருமுறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் 17 ஆண்டுகள்கடந்த பின்னரும் பல்வேறு

காரணங்களால் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. எனவே முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com