நாகா்கோவிலில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, திங்கள்கிழமை நாகா்கோவில் நகர பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
நாகா்கோவிலில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
நாகா்கோவிலில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

நாகா்கோவில்: தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, திங்கள்கிழமை நாகா்கோவில் நகர பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, மாநகராட்சி பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள், மின் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், மாணவா்களின் கல்வி புத்தகங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் தனியாக செயல்படும் கடைகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்த கடைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மாநகா் நல அலுவலா் ஐ.கிங்சால், மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றாத 10 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம்

விதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) நாகா்கோவில் வண்ணான்விளை, கிறிஸ்டோபா் காலனி சா்ச் தெரு, வடசேரி ஒற்றை தெரு, மீனாட்சிபுரம் ஆசாரிமாா் தெற்கு தெரு, ஹோலிகிராஸ் கல்லூரி சாலை, புன்னை நகா் ஆகிய பகுதிகளில் காய்ச்சல், சளி பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com