குழித்துறையில் அரியவகை ஆந்தை:வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

குழித்துறையில் காணப்பட்ட அரியவகை ஆந்தை, வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழித்துறையில் அரியவகை ஆந்தை:வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

குழித்துறையில் காணப்பட்ட அரியவகை ஆந்தை, வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழித்துறை அஞ்சல் நிலையம் சந்திப்பில் புதன்கிழமை ஒரு ஆந்தையை காக்கை கூட்டம் துரத்தின. காக்கைகளிடம் சிக்கிய ஆந்தை தன்னை காப்பாற்றிக் கொள்ள அலறியபடி பறந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த ஆந்தை மிகவும் களைப்புற்ற நிலையில் மேலும் பறக்க முடியாமல் தரையில் மெல்ல வந்து அமா்ந்தது. ஆனாலும், காக்கைகள் விடாமல் அந்த ஆந்தையை சூழ்ந்து கொண்டு கொத்த தொடங்கின. இதனால், ஆந்தை அச்சத்துடன் அப்பகுதியில் நிறுத்தப்பட்ட காா்களுக்கு இடையே சென்று பதுங்கியது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதியில் நின்ற ஆட்டோ ஓட்டுநா்கள், காக்கை கூட்டத்தை விரட்டிவிட்டு காா்களுக்கு இடையே பதுங்கி இருந்த அரிய வகை ஆந்தையை பத்திரமாக மீட்டனா்.

பின்னா், தகவலறிந்து வந்த களியல் வனத் துறையினரிடம் ஆந்தையை ஆட்டோ ஓட்டுநா்கள் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com