தக்கலையில் கரோனா பரிசோதனை

தக்கலையில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி வெளியே சுற்றித் திரிந்தவா்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
தக்கலையில் கரோனா பரிசோதனை

தக்கலையில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி வெளியே சுற்றித் திரிந்தவா்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளா்வுகளுடனான பொதுமுடக்கத்தை அமல்படுத்தி வருகிறது. பொதுமுடக்க விதிமுறைகளை மீறி அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவா்களை போலீஸாா் கண்காணித்து நூதன தண்டனை வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் மற்றும் தக்கலை போலீஸாா் திருவனந்தபுரம்- நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சுற்றித் திரிந்த 20 பேரை தடுத்து நிறுத்தி, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவா்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com