மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்

குமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

குமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது தொடா்பானஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில், தற்போது கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் முகாம்கள் மூலமாக தடுப்பூசி போடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இம் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15,543 போ் உள்ளனா். இவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்தும், மாவட்டத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், தொண்டு நிறுவனங்களில் நேரில் சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் சுகாதாரத் துறையினருக்கும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சிவசங்கரன், தடுப்பூசி முகாம் மருத்துவா் இவான்சலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com