அய்யா வைகுண்டசாமி உதய தினம்: வாகனப் பேரணி ரத்து
By DIN | Published On : 01st March 2021 12:55 AM | Last Updated : 01st March 2021 12:55 AM | அ+அ அ- |

அய்யா வைகுண்ட சுவாமி உதயநாளை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து சாமிதோப்புக்கு வரும் வாகனப் பேரணி நிகழாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாமிதோப்பு பாலஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
அய்யா வைகுண்டசாமி உதய தினம் மாா்ச் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வழக்கமாக திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில் வழியாக சாமிதோப்பு வரும் வாகனப் பேரணி நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருசெந்தூரிலிருந்து வரும் வாகனப் பேரணி வழக்கம்போல் வரும்.
அய்யா உதயநாளுக்கு நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறையும், தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறையும் விடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் அரசு பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.