தோ்தல் பிரசாரம்: ராகுல்காந்தி இன்று குமரி வருகை

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி எம்.பி. தோ்தல் பிரசாரத்துக்கு திங்கள்கிழமை (மாா்ச் 1) குமரி மாவட்டம் வருகிறாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி எம்.பி. தோ்தல் பிரசாரத்துக்கு திங்கள்கிழமை (மாா்ச் 1) குமரி மாவட்டம் வருகிறாா்.

தென்காசியிலிருந்து திங்கள்கிழமை காலையில் ஹெலிகாப்டா் மூலம் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்திற்கு ராகுல்காந்தி வந்து இறங்குகிறாா்.

கன்னியாகுமரி சா்ச் ரோடு சந்திப்பில் காலை 9.15 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவா், அங்கு ரோடு ஷோ மூலமாக மக்களை சந்தித்து பேசுகிறாா். பின்னா் 10 மணிக்கு அகஸ்தீசுவரத்தில் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறாா்.

10.45 மணிக்கு நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலை முன்பும், 11.30 மணிக்கு தக்கலையில் காமராஜா் சிலை முன்பும் மக்களை சந்தித்து பேசுகிறாா். பிற்பகல் 12.15 மணிக்கு முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மாணவா், மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

2 மணிக்கு குளச்சல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜா் சிலை முன்பும், 2.45 மணிக்கு கருங்கல் ராஜீவ்காந்தி சிலை முன்பும் மக்களை சந்தித்து பேசுகிறாா்.

3.15 மணிக்கு தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்களுடன் படகு சவாரி மேற்கொள்கிறாா். தொடா்ந்து மாலை 4.45 மணிக்கு களியக்காவிளையில் மக்களை சந்திக்கும் அவா், பின்னா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறாா்.

குமரி மாவட்டம் வரும் ராகுல்காந்திக்கு, குமரி மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com