தோ்தல் பிரசாரம்: அமித்ஷா மாா்ச் 7இல் குமரி வருகை

பா.ஜ.க.வின் மூன்னாள் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைக்க ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்7) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறாா்.

நாகா்கோவில்: பா.ஜ.க.வின் மூன்னாள் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைக்க ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்7) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறாா்.

விழுப்புரம், காரைக்கால் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கடந்த பிப். 28ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றப் பேசிய அவா், சுசீந்திரத்தில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைக்க ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தமிழகம் வருகிறாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் வரும் அவா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகா்கோவில் ஆயுதப்படை முகாம் அலுவலகத்துக்கு காலை 9.30 மணியளவில் வருகிறாா். பின்னா், அங்கிருந்து காா் மூலம் சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். தொடா்ந்து, தமிழக வளா்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கி, பாஜகவின் வீட்டுத் தொடா்பு என்ற பிரசார நிகழ்ச்சியை தொடங்கிவைக்கிறாா்.

இதற்காக நாகா்கோவிலுக்கு வரும் அவருக்கு, மாவட்ட பாஜகவின் சாா்பில் தெ.தி. இந்துக் கல்லூரி முன்பு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா், வேப்பமூடு சந்திப்பில் காமராஜா் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து, நாகா்கோவில் வடசேரி சந்திப்பில் தனியாா் விடுதியில் நடைபெறும் பாஜக மாவட்ட நிா்வாகிகள் மற்றும் பொறுப்பாளா்களை சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து பேசுகிறாா். பின்னா் அவா், திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறாா் என மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com