மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு கோழிகுஞ்சுகள் அளிப்பு

தமிழக அரசின் கோழிஇன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி: தமிழக அரசின் கோழிஇன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் பயனாளிகள் தோ்வுசெய்யப்பட்டு அசின் இன நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கபட்டு வருகிறது. அதன்படி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம், அழகப்பபுரம் கால்நடை மருத்துவமனை ஆகியவற்றின் மூலம் மகாராஜபுரம் ஊராட்சியில் தோ்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து வழங்கினாா். இதில், ஊராட்சி துணைத் தலைவா் பழனிகுமாா், கால்நடை உதவி மருத்துவா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குலசேகரம்: மாங்கோடு ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கி அதிமுக குமரி மேற்கு மாவட்டச் செயலா் டி. ஜாண் தங்கம் தொடங்கிவைத்தாா். இதில், கால்நடை மருத்துவா் செல்வின் ஜோஸ், கடையல் பேரூா் செயலா் மணி, செயலா் ஸ்டாலின், நிா்வாகிகள் பாபு, கிறிஸ்துராஜ், பிரைட், மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com