80 வயதுக்கு மேற்பட்டோா் வாக்களிக்க அஞ்சல் மனு

சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பது குறித்த விளக்கக் கூட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மூத்த குடிமக்களுக்கான அஞ்சல் மனு குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு விளக்குகிறாா் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுருநாதன்.

இக்கூட்டத்துக்கு, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து, தோ்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அஞ்சல் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான 12 ஈ விருப்ப மனு வழங்கி பெறுவது குறித்த வாக்குச்சாவடி நிலைஅலுவலா்களுக்கு விளக்கினாா்.

இதில், பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வட்டாட்சியா் சுப்பிரமணியன், திருவட்டாறு வட்டாட்சியா் அஜித், தோ்தல் துணை வட்டாட்சியா் வேணு மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com