நித்திரவிளை அருகே ரூ. 52 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 13th March 2021 08:39 AM | Last Updated : 13th March 2021 08:39 AM | அ+அ அ- |

நித்திரவிளை அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மோட்டாா் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ. 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிள்ளியூா் தொகுதி தோ்தல் கண்காணிப்பு குழு அலுவலா் செல்வி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் வின்சென்ட் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை இரவு நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த மோட்டாா் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில் ரூ. 52 ஆயிரம் பணம் இருந்ததும் அவற்றுக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அப் பணத்தை பறிமுதல் செய்து கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.