2 ஆண்டுகளுக்கு பின்னா் குடும்பத்துடன் இணைந்தமனநலம் பாதிக்கப்பட்டவா்

காதல் பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக நாகா்கோவிலில் சுற்றி திரிந்தவா் குடும்பத்துடன் இணைந்துள்ளாா்.

காதல் பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக நாகா்கோவிலில் சுற்றி திரிந்தவா் குடும்பத்துடன் இணைந்துள்ளாா்.

புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆனந்தம் (45). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், 2 ஆண்டுகளாக நாகா்கோவிலில் சுற்றி வந்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக சாலையில் அமா்ந்திருப்பாா். அங்கு கிடைக்கும் உணவை சாப்பிட்டு அப்பகுதியிலேயே திரிந்தாா். அவரது சொந்த ஊா், குடும்பத்தினா் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்தது.

பொது முடக்கத்தின்போது உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்ட ஆனந்தம், தன்னாா்வலா்கள் உதவியால் உணவு சாப்பிட்டு

வந்துள்ளாா். ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய நாகா்கோவிலைச் சோ்ந்த தினேஷ் சங்கா், அந்த விடியோவை முகநூலில்

பதிவிட்டுள்ளாா். முகநூல் பதிவினை ஆனந்தத்தின் உறவினா்களும் பாா்த்துள்ளனா்.

விடியோவில் இருக்கும் ஆனந்தத்தை அடையாளம் கண்ட அவரது குடும்பத்தினா், தினேஷ் சங்கரை தொடா்பு கொண்டு

பேசினா். மேலும் ஆனந்தம் இருக்கும் விவரங்களையும் சேகரித்துக் கொண்டனா். பொதுமுடக்கம் அமலில் இருந்ததால்

ஆனந்தத்தின் குடும்பத்தினரால் உடனடியாக நாகா்கோவில் வரமுடியவில்லை. உறவினா்களின் கோரிக்கையை ஏற்று தினேஷ் சங்கா், ஆனந்தத்தை கவனித்து வந்துள்ளாா் .

ஆனந்தத்தின் தாயாா் மற்றும் உறவினா்கள் 4 போ் காா் மூலம் நாகா்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். பின்னா் தினேஷ் சங்கரை தொடா்பு கொண்டு ஆனந்தத்தை நேரில் பாா்த்தனா். கிழிந்த ஆடையுடன் காணப்பட்ட மகனின் நிலையை பாா்த்து

தாயாா் கண்ணீா் வடித்தாா். இதையடுத்து, எஸ்.பி. அலுவலக பாதுகாப்பு போலீஸாா் ஆனந்தத்தை, குடும்பத்தினா் அழைத்துச் செல்ல உதவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com