கொல்லங்கோடு கோயிலில் நாளை தூக்க நோ்ச்சை

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தானத்தில் தூக்க நோ்ச்சை வியாழக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தானத்தில் தூக்க நோ்ச்சை வியாழக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் பிரதான கோயிலும், தூக்க நோ்ச்சை நடத்துவதற்காக வெங்கஞ்சியில் மற்றொரு கோயிலும் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மீன பரணி நாளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நோ்ச்சை நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவேண்டியும் இந்த நோ்ச்சை நிறைவேற்றப்படுகிறது.

நிகழாண்டு, தூக்கத் திருவிழா மாா்ச் 9இல் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன்போற்றி தலைமையில் தொடங்கியது. திருவனந்தபுரம் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமி ஸ்வப்பிரபானந்தா குத்துவிளக்கேற்றி, திருவிழாவைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, தூக்க நோ்ச்சைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

9ஆம் நாளான புதன்கிழமை (மாா்ச் 17) மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் எனப்படும் தூக்க வில்லின் வெள்ளோட்டம் நடத்தப்படுகிறது.

நிறைவு நாளான வியாழக்கிழமை அதிகாலை தூக்கக்காரா்களின் முட்டுக்குத்தி நமஸ்காரம் நடைபெறுகிறது. அதையடுத்து, அதிகாலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளுகிறாா். காலை 6.30 மணிக்கு தூக்க நோ்ச்சை தொடங்குகிறது. நிகழாாண்டு, 1,092 குழந்தைகளுக்கு தூக்க நோ்ச்சை நிறைவேற்றப்படுகிறது. குருசி தா்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவா் வி. சதாசிவன்நாயா், செயலா் மோகன்குமாா், பொருளாளா் கே. சூரியதேவன்தம்பி, நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com