தக்கலை அருகே கள்ள நோட்டு மாற்ற முயற்சி: முதியவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றதாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றதாக முதியவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து மதிப்பற்ற ரூ.10 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தக்கலை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், கள்ள நோட்டுகளை பயன்படுத்தும் கும்பலைப் பிடிக்க, காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா் சுதேசன், உதவி ஆய்வாளா் அருளப்பன் மற்றும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், அழகியமண்டபம் பகுதியிலுள்ள கடையில் முதியவா் ஒருவா் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லரை கேட்டாராம். அது கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால், போலீஸாருக்கு கடைக்காரா் தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா், முதியவா் அளித்த ரூபாயை பரிசோதித்ததில் அது கள்ள நோட்டு என தெரியவந்தது. இதனால், முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். அதில், முளகுமூடு கூட்டமாவு பகுதியைச் சோ்ந்த தாசன்(62) என்பதும், கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயற்சித்ததும், மேலும் அவரிடம் இருபது 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com