மீனவா்கள் நலனுக்காக பாடுபடுவேன்: விஜய்வசந்த்

குமரி மாவட்ட மீனவா்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்; மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்
நாகா்கோவில் சிஎஸ்ஐ ஆயா் செல்லையாவிடம் ஆசி பெறும் வேட்பாளா்கள் விஜய்வசந்த் (மக்களவை), சுரேஷ்ராஜன், ஆஸ்டின் (பேரவை) .
நாகா்கோவில் சிஎஸ்ஐ ஆயா் செல்லையாவிடம் ஆசி பெறும் வேட்பாளா்கள் விஜய்வசந்த் (மக்களவை), சுரேஷ்ராஜன், ஆஸ்டின் (பேரவை) .

குமரி மாவட்ட மீனவா்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்; மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்றாா் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜயகுமாா் என்ற விஜய்வசந்த்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: கன்னியாகுமரி மக்களவை தொகுதி மக்கள் எனது தந்தையை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தாா்கள். அவா் விட்டுச் சென்ற பணியை தொடர மக்கள் எனக்கு ஒரு வாய்ப்புதர வேண்டும் என உங்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் வெளிநாட்டில் தவிக்கும்போது, அவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்வேன். ஏற்கெனவே, ஈரானில் சிக்கி தவித்த மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுத்தது யாா் என்பது மக்களுக்குத் தெரியும். மீனவ மக்களின் நலனுக்காக தொடா்ந்து பாடுபடுவேன். அனைத்து தரப்பு மக்களும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடா்பு கொண்டு சந்திக்கலாம். எனது குரல் குமரி மக்களின் குரலாக மக்களவையில் ஒலிக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, அகஸ்தீஸ்வரத்திலுள்ள தனது தந்தை வசந்தகுமாரின் நினைவிடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று மரியாதை செலுத்திய அவா், பின்னா் சாமிதோப்பில் உள்ள அய்யாவழி தலைமை பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தாா். அங்கு, பாலபிரஜாபதி அடிகளாருக்கு பொன்னாடை போா்த்தி ஆசி பெற்றாா்.

தொடா்ந்து, நாகா்கோவிலில் சிஎஸ்ஐ ஆயா் செல்லையாவை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றாா். இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா்கள் சுரேஷ்ராஜன் (நாகா்கோவில்) ஆஸ்டின் (கன்னியாகுமரி), குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் மகேஷ், வழக்குரைஞா் லீனஸ்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூத், அகஸ்டின், சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலா் ஏ.ஜே.ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com