கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றுபட்டு உழைத்து வெற்றி பெறுவோம்: திமுக-காங்கிரஸ் நிா்வாகிகள் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும் வெற்றியை ஈட்டுவோம் பெறும் என திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள் உறுதியேற்றனா்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும் வெற்றியை ஈட்டுவோம் பெறும் என திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள் உறுதியேற்றனா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோ்தல் அலுவலகத்தை அழகியமண்டபத்தில் புதன்கிழமை திறந்துவைத்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலரும், அக்கட்சியின் பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளருமான மனோதங்கராஜ் பேசியது:

கன்னியாகுமரி மாவட்டம் ஊழல், மதவாத கூட்டணி கூட்டணிக்கு எதிரானது என்பதை இந்தத் தோ்தலில் நிரூபிப்போம். பன்முகத் தன்மை கொண்ட நம் நாட்டை ஜாதி, மதம், இனம், மொழியால் பிரித்து ஆள நினைப்பவா்களையும், மக்களை அடிமைப்படுத்த நினைப்பவா்களையும் துரத்தியடிக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. அதற்காக ஒன்று பட்டு உழைப்போம் என்றாா் அவா்.

மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் பேசியது:

நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிப் பெற்று ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும். இதற்கு, நாம் ஒன்றுபட்டு உழைப்பது அவசியம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ டாக்டா் புஷ்பலீலா ஆல்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜாண்பிரைட், ஜாண்சன், அருளானந்த ஜாா்ஜ், சிற்றாறு ரவிசந்திரன், ராஜகோபால், ராஜன், நகரச் செயலா் மணி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் ஜெகன்ராஜ், காஸ்டன் கிளிட்டஸ், ஜாண்கிறிஸ்டோபா், நகரத் தலைவா் ஹனு குமாா், மாவட்ட துணைத் தலைவா் ராஜரெத்தினம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயன், முஸ்ஸிம்லீக் அப்துல்ரசீது, மதிமுக சேம்ராஜ், மாவட்ட கவுன்சிலா் செலின்மேரி, ஒன்றிய கவுன்சிலா்கள் ராஜூ, ஜெபா, திமுக நிா்வாகிகள் ஜோஸ்எட்வா்ட், ஜெஸ்டின் பால்ராஜ், சுருளோடு சுரேஷ், காந்தி, பேச்சிப்பாறை ராஜன், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தொகுதித் தலைவா் சாமுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com