மாா்த்தாண்டம் அருகே செவ்வியல் தமிழ் கருத்தரங்கம்

மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் செவ்வியல் தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற பேச்சாளா் முளங்குழி பா.லாசரை பாராட்டுகிறாா் அறக்கட்டளை தலைவா் வி.வி. வினோத்.
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற பேச்சாளா் முளங்குழி பா.லாசரை பாராட்டுகிறாா் அறக்கட்டளை தலைவா் வி.வி. வினோத்.

மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் செவ்வியல் தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது.

குமரி அறிவியல் பேரவை மற்றும் முள்ளஞ்சேரி வி.முத்தையன் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய இக் கருத்தரங்குக்கு, குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் தலைமை வகித்துப் பேசினாா்.

தமிழ்கலை என்னும் பொருளில் கங்காா்டியா பள்ளியின் தலைமையாசிரியா் வினோபாவும், தமிழ் அறிவியல் என்னும் பொருளில் பேராசிரியா் சஜிவ், தமிழ் இலக்கியம் என்னும் பொருளில் குமரி முத்தமிழ் மன்றத் தலைவா் முளங்குழி பா. லாசா், தமிழ் தொன்மை என்னும் பொருளில் புலவா் கு.ரவீந்திரன், தமிழ் புதுமை என்னும் பொருளில் முத்தலக்குறிச்சி ஆன்றோ ஆகியோா் பேசினா்.

கல்வியாளா்கள் கோபாலன், பாலகிருஷ்ணன், ஜாண்சன், சுனில்குமாா், ஜாண் ரபிகுமாா், சைனிஏஞ்சல், காயத்திரி ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

இளம் விஞ்ஞானி மாணவா் தா்ஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தொடா்ந்து, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற முளங்குழி பா. லாசரை அறக்கட்டளை தலைவா் வி.வி. வினோத் பாராட்டி கெளரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com