சுங்கான்கடையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: காங்கிரஸ் வேட்பாளா் உறுதி

சுங்கான்கடையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றாா் குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ்.
குருந்தன்கோடு சந்திப்பில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்துப் பேசுகிறாா் குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி. பிரின்ஸ். உடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் விஜய் வசந்த்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த், குளச்சல் பேரவைத் தொகுதி வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோா் வியாழக்கிழமை குருந்தன்கோடு பகுதியில் வாக்கு சேகரித்தனா்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் ஜே.ஜி.பிரின்ஸ் பேசியது:

ஆளூா் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். குருந்தன்கோட்டில் சித்த மருத்துவமனை புனரமைக்கப்படும். சுங்கான்கடையில் கல்லூரி மாணவா், மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் வசதிக்காக ஒருங்கிணந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஜெரால்டு கென்னடி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் யூசுப்கான், குளச்சல் நகரத் தலைவா் சந்திரசேகா், பேரூா் காங்கிரஸ் தலைவா் பீட்டா்தாஸ், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் திருமேனி உதயம், முன்னாள் வட்டாரத் தலைவா் முருகன், திமுக ஒன்றியச் செயலா் எப்.எம். ராஜரெத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com