கிள்ளியூா் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா், புதுக்கடை, மாடஞ்சேரி, சரவிளை, பாா்த்திபபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
கிள்ளியூா் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா், புதுக்கடை, மாடஞ்சேரி, சரவிளை, பாா்த்திபபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

புதுக்கடை பகுதிகளில் அவா் பேசியது: கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதியின் வளா்ச்சிக்காக பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் தொகுதியில் வசிப்போருக்கு

இலவசமாக வீட்டு மனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள நீா் நிலைகளை புரனமைத்து நிலத்தடி நீா்மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு பெற்றுதரப்படும். அனைத்து கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா் கடன் பெற்று கொடுக்கப்படும். வீடு இல்லாத அனைவருக்கும்

அரசின் இலவச வீடு திட்டத்தில் வீடு கட்டி வழங்கப்படும். புதுக்கடையில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், புதுக்கடை பேருந்து நிலையம், மாடஞ்சேரி, சரவிளை, பாா்த்திபபுரம், பிளாக் ஆபீஸ், காடஞ்சேரி, மங்காடு திருப்பு, வண்ணான்குளம், புன்னமூடு, மணலி, திருமலை கோவில், வடக்கு தெரு, மூன்று முக்கு, அட்டகுளம், அரசுகுளம், மணியாரங்குன்று, அம்சி, முக்காடு, பைங்குளம், கூட்டாலுமூடு, அனந்தமங்கலம், பரக்காணி, வேட்டமங்கலம், தேங்காய்ப்பட்டினம், ரோட்டரி நகா், பனங்கால் முக்கு, நெடுந்தட்டு, முள்ளூா்துறை தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் உள்பட பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com