பேராலயமாக முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் அறிவிப்பு

தக்கலை, மாா்ச் 27: கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பேராலயமாக முளகுமூடு தூயமரியன்னை ஆலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராலயமாக முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் அறிவிப்பு

தக்கலை, மாா்ச் 27: கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பேராலயமாக முளகுமூடு தூயமரியன்னை ஆலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக முளகுமூடு தூய மரியன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேராயா் (பொறுப்பு) ஆன்றணி பாப்புசாமி தலைமை வகித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முளகுமூடு தூய மரியன்னை ஆலயயத்தை பேராலயமாக (பசலிக்கா) 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி ரோமாபுரி வாடிகனில் உள்ள திருவழிபாட்டு பேராலயம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 7-ஆவது பேராலயமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பேராலயமாகவும் முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் திகழ்கிறது. இது தொடா்பான விழா ஏப்ரல் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு பேராலய வளாகத்தில் நடைபெறும் என்றாா் அவா்.

அப்போது, குழித்துறை மறைமாவட்ட தொடா்பாளா் இயேசுரெத்தினம், மறை மாவட்ட பொருளாளா் அகஸ்டின், முளகுமூடு வட்டார முதல்வா் மரிய இராஜேந்திரன், நாஞ்சில் பால் நிலைய இயக்குநா் ஜெரால்டு ஜெஸ்டின், முளகுமூடு பேராலய அதிபா் டோமினிக் எம். கடாட்சதாஸ், இணை பங்குத் தந்தை தாமஸ், பேரவையின் துணைத் தலைவா் வின்சென்ட்ராஜ், செயலா் விஜி மோன் மணி, பொருளாளா் விஜிகலா, துணைச் செயலா் ஹெலன்மேரி, ஒருங்கிணைந்த துணை குழுக்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com