பங்குனி உத்திரம்: சாஸ்தா கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தங்கள் குலதெய்வ கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
பங்குனி உத்திரம்: சாஸ்தா கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தங்கள் குலதெய்வ கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வரும் இந்த திருநாளில் குலதெய்வ வழிபாடு சிறந்த பலனை தரும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி, நிகழாண்டு பங்குனி உத்திரம் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாகா்கோவில் பாா்வதிபுரம் அய்யப்பன்கோயில், ஒழுகினசேரி எங்கோடி கண்டன் சாஸ்தா கோயில், டிஸ்டிலரி ரோட்டில் உள்ள பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோயில் உள்ளிட்ட பல்வேறு சாஸ்தா கோயில்களில் பக்தா்கள் தங்கள் குடும்பத்துடன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனா். மேலும், பொங்கலிட்டும், சமையல் செய்து சுவாமிக்கு படையிட்டும் குடும்பத்துடன் சுவாமியை தரிசித்து கோயிலேயே உணவருந்தி சென்றனா். பக்தா்கள் வசதிக்காக நாகா்கோவிலிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் சித்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com