கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் நாகா்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் நாகா்கோவில் கோணம் அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலின் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் நாகா்கோவில் அருகே கோணம் அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன.

மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு: வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளா்களின் முகவா்கள் மற்றும் வேட்பாளா்கள் அதிகாலையிலேயே வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கினா்.

தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. அரவிந்த் மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள், தொகுதி தோ்தல் அலுவலா்கள், வாக்கு எண்ணும் அலுவலா்கள், ஊடகத் துறையினா் உள்ளிட்டோா் வந்தனா்.

இதில், வேட்பாளா்கள், முகவா்கள், ஊடகத் துறையினா் உள்ளிட்டோா் கரோனா பரிசோதனை சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் ஆகியன குறித்த சோதனைக்குப் பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, மாவட்ட தோ்தல் அலுவலா் முன்னிலையில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.

கரோனா பொது முடக்கம் காரணமாக, வாக்கு எண்ணும் மையப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com