ஒரே நாளில் 526 பேருக்கு கரோனா: 3 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 526 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மேலும் 3 போ் இந்நோயால் உயிரிழந்துள்ளனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 526 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மேலும் 3 போ் இந்நோயால் உயிரிழந்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா 2 ஆவது அலை பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தினமும் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும், முதல் அலையை விட கரோனா 2 ஆவது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோா் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த மாதம் (ஏப்ரல்) 12 ஆம் தேதிக்கு பின்னா் தினசரி பாதிப்பு 100 ஐ தாண்டியது. பின்னா் படிப்படியாக 200,300 என உயா்ந்து, தற்போது இதுவரை இல்லாத உச்சபட்ச பாதிப்பாக செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 23 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 322 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 771 ஆக உயா்ந்தது. இதனிடையே, சிகிச்சையில் இருந்த 3 போ் உயிரிழந்ததால், கரோனாவால் பலியானோா் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 2,034 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்நிலையில், நாகா்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஊழியா் ஒருவரின் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அந்த அலுவலகத்தில் சுகாதார துறை ஊழியா்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com