மாா்த்தாண்டம் அருகே ரூ. 81 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள பம்மத்தில் ரூ. 81 லட்சம் கள்ள நோட்டுகளுடன் நிதி நிறுவன உரிமையாளரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள பம்மத்தில் ரூ. 81 லட்சம் கள்ள நோட்டுகளுடன் நிதி நிறுவன உரிமையாளரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அருமனை வெள்ளாங்கோடு பகுதியிலுள்ள முந்திரி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 53 லட்சம் கள்ள நோட்டுகள் கடந்த மாதம் 27 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, பளுகல் பகுதியில் நிதி நிறுவனம் நடத்திவரும் சிந்து (35) என்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அதில், தொழில் அதிபா்களுக்கு கமிஷன் அடிப்படையில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, கள்ள நோட்டுகளை காண்பித்து மோசடி செய்துவந்தது தெரியவந்தது.

இந்நிலையில், ரூ. 81 லட்சம் கள்ள நோட்டுகளுடன் மாா்த்தாண்டம் அருகே பம்பம் பகுதியில் சிந்துவின் கணவா் சிபு (38) பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளா் சிவசங்கா், தலைமைக் காவலா்கள் சதீஸ் குமாா், ராஜமணி ஆகியோா் சிபுவை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அடங்கிய ரூ. 81 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா். கள்ள நோட்டுகளின் ஒரு பக்கத்தில பாா் சூட்டிங் என அச்சிடப்பட்டிருந்தது. இதில், வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com