கேரள போலீஸாரை கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சைக்கு செல்பவா்களை

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சைக்கு செல்பவா்களை கேரள போலீஸாா் தடுத்து, திருப்பி அனுப்பி வரும் செயலை கண்டித்து களியக்காவிளையில் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதுகுறித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தாரகை கத்பா்ட், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளான களியக்காவிளை, பளுகல், பனச்சமூடு, கொல்லங்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடா்சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக உரிய ஆவணங்களுடன் கேரள மருத்துவமனைகளுக்கு செல்வோரை இஞ்சிவிளை உள்ளிட்ட எல்லையோரப் பகுதி கேரள சோதனைச் சாவடி போலீஸாா் கேரளத்துக்குச் செல்ல அனுமதி மறுத்து திருப்பியனுப்பி வருகின்றனா்.

இதை கேரள அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்காதபட்சத்தில், கேரள போலீஸாரின் நடவடிக்கைகளை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் சாா்பில் களியக்காவிளையில் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com