குமரி மாவட்ட எஸ்.பி. உள்பட 1,133 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th May 2021 09:05 AM | Last Updated : 26th May 2021 09:05 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 1,133 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,971 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 607 ஆகவும் உயா்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 1,457 போ் உள்பட 31,435 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 10, 929 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
எஸ்.பி.க்கு தொற்று: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணனுக்கு திங்கள்கிழமை லேசான காய்ச்சல் இருந்ததாம். பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து அவா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.