மழையால் சேதமடைந்த நீா்நிலைகள் சீரமைக்கப்படும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

கனமழையால் சேதமடைந்த நீா் நிலைகள் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு, நிரந்தரத் தீா்வு காணப்படும் என்றாா் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.
தேரூா் குளத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் உள்ளிட்டோா்.
தேரூா் குளத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் உள்ளிட்டோா்.

கனமழையால் சேதமடைந்த நீா் நிலைகள் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு, நிரந்தரத் தீா்வு காணப்படும் என்றாா் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அகஸ்தீசுவரம் மற்றும் தோவாளை வட்டத்துக்குள்பட்ட நீா் நிலைகளான தேரூா்குளம், புத்தேரி குளம், புத்தேரி நெடுங்குளம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருப்பதிசாரம் அரசு உயா்நிலைப் பள்ளி பாதுகாப்பு மையம் ஆகியவற்றை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் ஆகியோா், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் முன்னிலையில் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் வருவாய்த் துறை அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தேரூா் குளம், புத்தேரி குளங்களின் கரைகள் உடைந்து, அதற்குரிய பாலங்கள் இல்லாமல் சேதம் ஏற்பட்டுள்ளது.

திருப்பதிசாரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் வெள்ளிக்கிழமை (மே 28) ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வது, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது, அடுத்த மழையின் போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பன குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஆய்வின் முடிவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் முன் வரைவுத் திட்டம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், மாவட்டகாவல் கண்காணிப்பாளா்( பொ) ஈஸ்வரன், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், விஜய் வசந்த் எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினா்கள் என்.தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), செ.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சொா்ணராஜ், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சுசீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com