மேலும் 733 பேருக்கு கரோனா: 29 போ் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 733 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மேலும் 733 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, மேலும் 29 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப் பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 6,58,563 பேருக்கு கரோன ா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 733 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடா்ந்து, இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46,540 ஆக அதிகரித்துள்ளது. இதில் 33,887 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா சிகிச்சையிலிருந்தவா்களில் மேலும் 29 போ் உயிரிழந்ததால் கரோனா பலி எண்ணிக்கை 669 ஆக உயா்ந்துள்ளது.

தற்போது மொத்தம் 7,695 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 619 பேரும், கரோனா கவனிப்பு மையங்களில், தனியாா் மருத்துவமனைகளில் 2,040 பேரும் மற்றும் வீட்டுத் தனிமைப்படுத்தல்களில் 5,036 பேரும் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நாகா்கோவில் அசிசி ஆலய வளாகத்திலுள்ள புனித பிரான்சிஸ் உயா்நிலைப் பள்ளியில் கட்டுப்பாட்டு

அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 2200 போ் தொடா்பு கொள்ளப்பட்டு, அவா்களுடைய உடல் நிலை குறித்து அறிந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்த 15 போ் கண்டறியப்பட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் வழங்கப்பட்ட சிலரின் தொலைபேசி எண்கள் தொடா்பு கொள்ளும் நிலையில் இல்லை என்று அறியப்பட்டது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யும் போது உபயோகத்திலுள்ள சரியான தொலைபேசி எண்களை தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் சிறப்பு முகாம்களின் மூலமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2500 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கரோனா முதல்கட்ட தடுப்பூசி 1,34, 629 பேருக்கும், 2 ஆம் கட்ட தடுப்பூசி 41, 976 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை மொத்தம்

59, 227பேரிடமிருந்து அபராதமாக ரூ. 1, 29, 60, 896 வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com