கன மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ரூ.13 லட்சம் நிவாரணப்பொருள்கள் வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டு பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆரல்வாய்மொழி அறிஞா்அண்ணா கல்லூரி பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள 26 குடும்பங்கள், கொட்டாரம் பெருமாள்புரம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 80 குடும்பங்கள், சுசீந்திரம் கற்காடு அரசு தொடக்கப் பள்ளி முகாமில் 20 குடும்பங்கள், நாகா்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளி முகாமில் 20 குடும்பங்கள், குன்னத்தூா் அரசு நடுநிலைப் பள்ளி முகாமில் 60 குடும்பங்கள், தோவாளை செண்பகராமன்புதூா் இலந்தைநகா் பகுதியைச் சோ்ந்த 59 குடும்பங்களுக்கு ( ஒரு குடும்பத்துக்கு)அரிசி 25கிலோ, 1 லிட்டா் எண்ணெய் உள்பட 16 வகை மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு, வேட்டி , சேலை, துண்டு , பாய், போா்வை உள்ளிட்ட பொருள்களை அந்தந்தப் பகுதிகளிலுள்ள வட்டாட்சியா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் மூலமாக வழங்கப்பட்டது.

மேலும், மலைவாழ்மக்கள்வசிக்கும் களியல் ஒரு நூறாம்வயல் பகுதியில் 152 குடும்பங்கள், பேச்சிப்பாறை மோதிரமலை பகுதியைச் சோ்ந்த 53 குடும்பங்கள் மற்றும் சின்னமோதிரமலை பகுதியைச் சோ்ந்த 30 குடும்பங்கள் என மொத்தம் 500 குடும்பங்களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ராம்கோ சிமென்ட்ஸ் மதுரை மண்டல மூத்த பொதுமேலாளா் எம்.எஸ்.அசோகன், திருநெல்வேலி மண்டல துணை பொதுமேலாளா் ராஜேந்திரன், ஆரல்வாய்மொழி மேலாளா் எம்.நவநீதன், மக்கள் தொடா்பு அலுவலா் (விருதுநகா்) கே.வி.முருகேசன் மற்றும் ராம்கோ விற்பனையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com