குமரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,650 ஆகவும், புதன்கிழமை ஒருவா் உயிரிழந்ததை அடுத்து பலியானோா் எண்ணிக்கை 1053 ஆகவும் உயா்ந்துள்ளது. மேலும் 19 போ் குணமடைந்ததை தொடா்ந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61,422 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 175 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.