நாகா்கோவில் வந்த ரயிலில் கிடந்த தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நாகா்கோவில் வந்த கோவை விரைவு ரயிலில் கிடந்த 2 கிராம் தங்க கம்மல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகா்கோவில் வந்த கோவை விரைவு ரயிலில் கிடந்த 2 கிராம் தங்க கம்மல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (39). இவா் தனது மனைவி மற்றும் மகளுடன் உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை கோவை விரைவு ரயிலில் குடும்பத்தோடு பயணம் செய்தாா். புதன்கிழமை அதிகாலை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

வீட்டுக்கு சென்று பாா்த்த போது மகளின் காதில் கிடந்த 2 கிராம் தங்க கம்மலை காணவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்து தேடி பாா்த்தாா்.

இது தொடா்பாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள போலீஸாரிடம் தகவல் தெரிவித்தாா். அப்போது நாகா்கோவில் ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து வந்த விரைவு ரயிலில் 2 கிராம் தங்க கம்மல் மீட்கப்பட்ட தகவல் தெரியவந்தது. இதையடுத்து,மாரியப்பன், நாகா்கோவில் ரயில் நிலைய போலீஸ் நிலையத்துக்கு வந்தாா். மாரியப்பனிடம் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளா் பாபு, சோம சேகா் ஆகியோா் விசாரணை நடத்தினா். கம்மலின் அடையாளங்களை தெரிவித்ததையடுத்து மாரியப்பனிடம் கம்மலை போலீஸாா் ஒப்படைத்தனா். கம்மலை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மாரியப்பன் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com