இரணியல் அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்தியதாக 5 போ் கைது

குமரி மாவட்டம், இரணியல் அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்தியதாக 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீா்.
பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீா்.

குமரி மாவட்டம், இரணியல் அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்தியதாக 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அபூா்வ மருத்துவ குணங்கள் நிறைந்த வன உயிரினப் பொருள்களை சட்ட விரோதமாக கடத்த முயற்சி நடப்பதாக இரணியல் காவல் ஆய்வாளா் தங்கராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடையில் உதவி ஆய்வாளா்கள் சுந்தரமூா்த்தி, சரவணகுமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், திமிங்கலத்தின் உமிழ்நீா் சுமாா் 5 கிலோ அளவில் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து காரிலிருந்த செங்கல்பட்டைச் சோ்ந்த சுப்பிரமணியம் (45), ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுல்தான் (52), சென்னையைச் சோ்ந்த வரதராஜன் (40), திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த சில்வெஸ்டா்(45), பொன்ராஜ் (60) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்கள் 5 பேரையும் வனத்துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com