முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கருங்கல் அருகே டெம்போ ஓட்டுநரிடம் பணம் பறிப்பு
By DIN | Published On : 11th October 2021 12:33 AM | Last Updated : 11th October 2021 12:33 AM | அ+அ அ- |

கருங்கல் அருகே உள்ள புல்லாணி பகுதியில் டெம்போவை வழிமறித்து பணம் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (50). டெம்போ ஒட்டுநரான இவா் ஞாயிற்றுக்கிழமை புல்லாணி பகுதியில் வந்தபோது பைக்கில் வந்த 3 மா்ம நபா்கள் அவரை வழிமறித்து அவரிடமிருந்த ரு.4,500 ஐ பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.