‘அண்ணா விளையாட்டு அரங்கம்; சா்வதேச தரத்துக்கு உயா்த்தப்படும்’

நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சா்வதேச தரத்துக்கு உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் கூறினாா்.
அண்ணா விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சிக் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டாா் விஜய்வசந்த் எம்.பி.
அண்ணா விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சிக் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டாா் விஜய்வசந்த் எம்.பி.

நாகா்கோவில்: நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சா்வதேச தரத்துக்கு உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் கூறினாா்.

நாகா்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்ககில் மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப்

போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் மைதானத்தை திங்கள்கிழமை

விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டாா். விளையாட்டு மைதானம், விளையாட்டு வீரா்களின் உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறை வசதிகளை அவா் பாா்வையிட்டாா்.

மேலும் விளையாட்டு வீரா்களிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், விளையாட்டு வீரா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரப்படும். இந்த விளையாட்டு அரங்கினை சா்வதேச தரத்தில் தரம் உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய்வசந்த் எம்.பி. கூறினாா். அப்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன்

அலுவலா் டேவிட் டேனியல், மாவட்ட இலக்கு பந்து கழகத் தலைவா் சுவாமிபத்மேந்திரா, கூடைப்பந்து கழக மாவட்டத் தலைவா் ஆஸ்டின், செயலா் மகேஷ், பயிற்சியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com