உலக அயோடின் பற்றாக்குறைவிழிப்புணா்வு தினம்

ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில், உலக அயோடின் பற்றாக்குறை விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் மருத்துவா்கள் கிங்சால், சங்கீதா.
நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் மருத்துவா்கள் கிங்சால், சங்கீதா.

ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில், உலக அயோடின் பற்றாக்குறை விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் லியாகத் அலி, பேராசிரியா் அருணாசலம், நிா்வாக அலுவலா் நடராஜன், செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலக மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் கிங்சால், விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். கருவில் உள்ள குழந்தையின் மூளை, உடல் , மன வளா்ச்சிகளுக்கு அயோடின் சத்து மிக அவசியம். அயோடின் கலந்த உப்பை உணவில் சோ்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான, அறிவுத்திறன் மிக்க குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்றாா் அவா்.

மருங்கூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சங்கீதா, மாவட்ட பயிற்சி மருத்துவா் கிப்சன் அயோடின், அகஸ்தீசுவரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வா்கீஸ்ராஜா ஆகியோா் பங்கேற்றனா். அயோடின் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேராசிரியா் அய்யப்பன் தொகுத்து வழங்கினாா். மாணவா் கணபதி வரவேற்றாா். மாணவி சரண்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com