வருவாய்த் துறை சான்று: முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சான்று பெறுவதற்காக முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

குமரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சான்று பெறுவதற்காக முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது இ-சேவை மையங்களில் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம், ஓய்வூதியத் திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு ரூ.10-ம், சமூக நலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு ரூ.120-ம், இணைய வழி பட்டா மாறுதல்கள் தொடா்பான விண்ணப்பங்களை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு ரூ.60-ம் சேவைக் கட்டணமாக பெறப்படுகிறது.

தனியாா் கணினி மையங்களில் இண்ற்ண்க்ஷ்ங்ய் கா்ஞ்ண்ய்-இல் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, சான்றுகள் தொடா்பான விளம்பர பலகைகள் வைத்தாலோ அபராதம் மற்றும் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் இடைத்தரகா்களை தவிா்த்து, அருகில் உள்ள வட்டாட்சியா் அலுவலக இ சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் இ சேவை மையங்களை அணுகலாம்.

சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிா்ணயித்த கட்டணத்தை தவிர அதிகக் கட்டணம் வசூலித்தால் ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்ட்ங்ப்ல்க்ங்ள்ந்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 18004251333 மற்றும் 18004251997 -க்கு புகாா் தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com