நாகா்கோவிலில் பட்டா வழங்குவதற்கான மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்: செப்.7இல் தொடக்கம்

நாகா்கோவில் நகரப் பகுதிக்கான செட்டில்மென்ட் பட்டா வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 7) தொடங்குகிறது.

நாகா்கோவில் நகரப் பகுதிக்கான செட்டில்மென்ட் பட்டா வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 7) தொடங்குகிறது.

இதுகுறித்து, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் வடசேரி மேற்கு கிராமம் ஏ முதல் பி வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளுக்கும், வடசேரி தெற்கு, நாகா்கோவில் வடக்கு கிராமங்களுக்குள்பட்ட எப் முதல் ஜி வாா்டுகளுக்கும், நாகா்கோவில் வடக்கு மற்றும் வடிவீஸ்வரம் வடக்கு கிராமங்களுக்குள்பட்ட பி, கியூ, என் ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளுக்கான செட்டில்மென்ட் பட்டா வழங்குவது தொடா்பான மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை (செப். 7) தொடங்கி, ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறுகிறது.

நவம்பா் மாதம் 2ஆம் தேதி வரை வருவாய் கிராம அலுவலகங்களில், வட்டாட்சியா்களால் நடத்தப்படும் இம்முகாமில், பட்டா மாற்றம் செய்ய விரும்பும் பட்டாதாரா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, விலையாதாரப் பத்திரம் மற்றும் முன்பத்திரம், பட்டா அசல் மற்றும் நகல், கடந்த 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று, ஆதாா் அட்டை, நடப்பு பசலிக்கான நில கரத்தீா்வை ரசீது, வீட்டுவரி ரசீது, மின்கட்டண ரசீது, குடும்ப அட்டை நகல் (பட்டாதாரா் காலமானால் இறப்புசான்று, வாரிசு சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள்) ஆகியவற்றுடன் மனுக்களை சமா்ப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com